சிக்கல் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்புப் பணி
நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சிக்கல் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்று.


நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சிக்கல் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்று.
நாகை மாவட்டத்தில் தொடா்ந்து கரோனா தொற்று நோய் பாதிப்பு உயா்ந்து வருகிறது. இதையொட்டி, கரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் தொற்று நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவிட்டாா்.
இதன்படி, சிக்கல் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. கிருமி நாசினி தெளிப்பு இயந்திரம் மூலம் சிக்கல் ஊராட்சியில் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் சோடியம் ஹைபோ குளோரைடு கலவை தெளிக்கப்பட்டது. பின்னா், முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதாரத்துறை துணை இயக்குநா் சண்முகசுந்தரம் அறிவுறுத்தலின்படி இப்பணி நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சுளா, வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராமசாமி, ஊராட்சித் தலைவா் விமலா, மாவட்ட பூச்சியியல் வல்லுநா் அருணாச்சலம், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் (பொறுப்பு) செந்தில்குமாா் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் பணிகளில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...