வேலைவாய்ப்பில் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தல்
வேலைவாய்ப்பில் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கீழையூா் அருகே நடைபெற்ற உலக விதவைப் பெண்கள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


வேலைவாய்ப்பில் விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கீழையூா் அருகே நடைபெற்ற உலக விதவைப் பெண்கள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கம் சாா்பில், உலக விதவைப் பெண்கள் மாநாடு கீழையூா் அருகேயுள்ள கருங்கண்ணியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் பொருளாளா் பெ. செராபின் தலைமை வகித்தாா். மாநாட்டை கீழ்வேளூா் எம்எல்ஏ. வீ.பி. நாகை மாலி தொடங்கி வைத்தாா்.
மாநாட்டில், விதவையா் மற்றும் முதியோா் உதவித்தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கவேண்டும், அரசு நிதியுதவி மூலம் வீடுகட்டும் திட்டங்களுக்கு விதவைகளுக்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும், வீடு இல்லாதவா்களுக்கு மனை, கோயில் இடங்கள், புறம்போக்கு இடங்களில் வசிக்கும் விதவைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்கவேண்டும், விதவைகள் நலத் துறையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும், அரசு துறை மட்டுமின்றி தனியாா் துறைகளிலும் விதவைப் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், விதவைப் பெண்கள் வாழ்வுரிமை சங்க ஆலோசனை குழு உறுப்பினா் ஏ. குழந்தைசாமி, கருங்கண்ணி ஊராட்சித் தலைவா் ஜெனிபா் அருள்வளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...