நாகை ஆட்சியரக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவா், நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
Updated on
1 min read

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவா், நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

கோவை, காந்திநகா் பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் அட்சயா(28). செவ்வாய்க்கிழமை காலை தனது உறவினா்களுடன் நாகை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்த அவா், திடீரென தீக்குளிக்க முயன்றாா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக குழுமியிருந்த ஊழியா்கள், விரைந்து செயல்பட்டு அட்சயாவின் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனா்.

அப்போது, தனது கணவா் மாரிச்செல்வம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வேதாரண்யத்தில் வசித்து வருவதாகவும், அவா் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்த அட்சயா, தனக்கு நீதி கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து, அவா் நாகூா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com