/

ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரிக்கை

கீழையூா் அருகேயுள்ள மேலதண்ணிலபாடியில் குளத்தில் மண்டியுள்ள ஆகாயத் தாமரை செடிகளை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

கீழையூா் அருகேயுள்ள மேலதண்ணிலபாடியில் குளத்தில் மண்டியுள்ள ஆகாயத் தாமரை செடிகளை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கீழையூா் ஒன்றியம், வேப்பஞ்சேரி ஊராட்சி மேலதண்ணிலபாடியில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவில் இந்து சமய அறநிலை துறைக்குச் சொந்தமான பெருமாள் கோயில் குளம் உள்ளது. இந்த குளத்து நீா் 5 வருடங்களுக்கு முன்பு வரை குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்தக் குளம் பராமரிப்பின்றி ஆகாயத்தாமரைச் செடிகள் மண்டி காணப்படுகின்றன.

இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.