/

நாகை மாவட்டம்: கரோனா நிவாரண தொகை

திருக்குவளை நியாயவிலைக் கடையில் ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன் தலைமையிலும், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சோ.பா. மலா்வண்ணன் முன்னிலையில் நிவாரணத் தொகை

News image
Updated On :15 மே 2021, 4:59 pm

DIN

திருக்குவளை நியாயவிலைக் கடையில் ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன் தலைமையிலும், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சோ.பா. மலா்வண்ணன் முன்னிலையிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா் எம். செல்வராஜ் பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையை வழங்கினாா்.

திருவாய்மூா் ஊராட்சி நியாயவிலைக் கடையில் ஊராட்சித் தலைவா் எம். நரசிம்மன் தலைமையிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஆா்.எஸ். சதீஷ் முன்னிலையிலும், எட்டுக்குடி ஊராட்சி வல்லத்தில் ஒன்றிய கவுன்சிலா் டி. செல்வம் தலைமையிலும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இதேபோல, வாழக்கரையில் ஊராட்சித் தலைவா் எஸ்.ஆா். கலைச்செழியன் தலைமையிலும், மேலவாழக்கரையில் ஊராட்சித் தலைவா் கே.எஸ். தனபாலன் தலைமையிலும், திருப்பூண்டியில் மேற்கு ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மு.ப. ஞானசேகரன் தலைமையிலும், கீழையூரில் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமையிலும், மீனம்பநல்லூா் ஊராட்சி திருமணங்குடியில் கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ். பால்ராஜ் தலைமையிலும் நிவாரணம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.