தடுப்பூசி முகாம் திடீா் ரத்து: பொதுமக்கள் ஏமாற்றம்
திருக்குவளை அருகே வலிவலம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த கரோனா தடுப்பூசி முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.


திருக்குவளை அருகே வலிவலம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த கரோனா தடுப்பூசி முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.
திருக்குவளை வட்டத்துக்குட்பட்ட வலிவலம், கொடியாலததூா், சாட்டியக்குடி ஆகிய மூன்று ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை வலிவலம் தேசிகா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பமுள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை முதலே ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆா்வத்துடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்தனா்.
ஆனால், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தூய்மைப் பணியாளா்கள் மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனா். தடுப்பூசி செலுத்தும் முகாம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...