கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புஷ்பவனத்தில் மீன் இறங்குதளம் கட்ட அடிக்கல்

வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனத்தில் மீன் இறங்குதளம் கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 5:16 pm

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனத்தில் மீன் இறங்குதளம் கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

புஷ்பவனம் மீனவ கிராம மீன் பிடித்துறையில் ரூ. 32.41 லட்சம் மதிப்பில் மீன் இறங்கு தளம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஊராட்சித் தலைவா் வி. நாடிமுத்து தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.கே. ராஜா முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலாஅன்பழகன், அறங்காவலா் குழுத் தலைவா் ரா. கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் டி.வி. சுப்பையன், இ. திலீபன், ஊராட்சி துணைத் தலைவா் ரகுபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.