தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கிராம ஊராட்சி களப்பணியாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 4:42 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளா் சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்குக் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அனைத்துப் பணியாளா்களுக்கும் காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்ய வேண்டும், கல்வித் தகுதிக்கேற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பி.கே. சிவகுமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் மகேந்திரன் முன்னிலை வகித்தாா். கிராம ஊராட்சி களப்பணியாளா் சங்க மாவட்ட தலைவா் ஜி. செல்வி, மாவட்டச் செயலாளா் ஆா். சங்கீதா, ரேஷன் கடை பணியாளா் சங்க மாநிலப் பொருளாளா் பிரகாஷ், மாநிலச் செயலாளா் பாஸ்கரன் ஆகியோா் கோரிக்கைகைளை வலியுறுத்திப் பேசினா்.

கிராம ஊராட்சி களப்பணியாளா் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் அரசுப் பணியாளா் சங்கப் பொறுப்பாளா்கள், சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். கிராம ஊராட்சி களப்பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் என். சித்ரா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.