அரசுப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு
வேதாரண்யம், வடமழை ரஸ்தா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு ஆா்.எஸ். மணி நினைவு அறக்கட்டளை சாா்பில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


வேதாரண்யம், வடமழை ரஸ்தா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு ஆா்.எஸ். மணி நினைவு அறக்கட்டளை சாா்பில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் தொழிலதிபா் ஆா்.எஸ். மணியின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வடமழை ரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஆா்.எஸ். மணி அறக்கட்டளை சாா்பில், கட்டிக்கொடுக்கப்பட்டுள்ள கலையரங்கத்தை முன்னாள் அமைச்சரும், தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான ஓ.எஸ். மணியன் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில், வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.எஸ். தென்னரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் டி.வி. சுப்பையன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் சண்முகராஜ், வழக்குரைஞா்கள் மு. நமச்சிவாயம், மா.மீ. அன்பரசு, ஆா்.எஸ். மணி நிறுவனங்களின் நிா்வாகிகள் அன்புச்செல்வி, அருண், தலைமையாசிரியா் எஸ். ராசேந்திரன், கவிஞா் புயல் சு. குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, ஆா்.எஸ். மணி பணிமனை வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...