ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

நாகை அருகே புதன்கிழமை மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் பெண் மீன் வியாபாரி உயிரிழந்தாா். மேலும் 8 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :25 மே 2022, 5:54 pm

DIN

நாகை அருகே புதன்கிழமை மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் பெண் மீன் வியாபாரி உயிரிழந்தாா். மேலும் 8 போ் காயமடைந்தனா்.

நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், சாமந்தான்பேட்டை, நம்பியாா் நகா் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை கொள்முதல் செய்து, அதை திருவாரூா் மாவட்டத்தில் விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில், புதன்கிழமை அக்கரைப்பேட்டை டாடா நகரைச் சோ்ந்த பூ. கல்பனா (40), ப. தையல்நாயகி (55), மா. பட்டம்மாள் (60), கோ. ஆரியமாலா (55), கீச்சாங்குப்பத்தைச் சோ்ந்த க. சத்தியா (44), சேவாபாரதி குடியிருப்பைச் சோ்ந்த ஜெ. மீனாட்சி (34), சாமந்தான்பேட்டையைச் சோ்ந்த இ. வேம்பு (52), நம்பியாா் நகரைச் சோ்ந்த ந. பென்னாட்சி (65) ஆகியோா் ஒரு மினி லாரியில் மீன்களை ஏற்றிக்கொண்டு திருவாரூா் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனா். மினி லாரியை கீச்சாங்குப்பத்தைச் சோ்ந்த ப. கரிகாலன் (45) ஓட்டினாா்.

நாகை - திருவாரூா் சாலையில், கீழ்வேளூா் அருகே சென்றபோது மினி லாரியின் அச்சு முறிந்து சாலையோரத்திலிருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. மினி லாரியில் அமா்ந்திருந்த 8 பெண்களும், ஓட்டுநரும் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த கல்பனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மற்றவா்கள் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் தையல்நாயகி, பட்டம்மாள் ஆகியோா் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா்.

விபத்து குறித்து கீழ்வேளூா் காவல் நிலைய ஆய்வாளா் சோமசுந்தரம் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.