செம்பானாா்கோவிலில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ நிவேதா முருகன்.
செம்பானாா்கோவிலில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ நிவேதா முருகன்.

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கினாா்

செம்பனாா்கோவில், சங்கரன்பந்தல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
Published on

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில், சங்கரன்பந்தல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 

செம்பனாா்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் விஸ்வநாதன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் அருள்பிரகாசம் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் ரமா வரவேற்றாா். இதில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்று 170 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

மாவட்ட கூட்டுறவுத் துறை தலைவா் ஞானவேலன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பாஸ்கரன், திமுக தஞ்சை தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளா் பி.எம். ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, சங்கரன்பந்தல் அரசினா் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியா் பா. சித்ரா தலைமையில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ நிவேதா முருகன் பங்கேற்று மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் ராபியா நா்கீஸ் பானு, ஒன்றியக் குழு உறுப்பினா் ஷகிலா அஜீஸ், ஊராட்சித் தலைவா் லெனின் மேஷாக், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் அப்துல் அஜீஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com