கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள் மீட்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை..

News image
இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்கள், விசைப்படகுகள் விடுவிக்க வேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரை  சந்தித்து எம்.பி. ஆா்.சுதா கோரிக்கை
Updated On :14 டிசம்பர் 2024, 6:33 pm

Din

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரை சந்தித்து மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆா். சுதா கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவில் அவா் கூறியிருப்பதாவது:

தற்போது 141 மீனவா்கள் இலங்கை சிறையில் உள்ளனா். நீண்ட காலமாக சிறையில் உள்ள மீனவா்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும், மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 198 விசைப்படகுகளை மீனவா்களிடம் திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கவும், கச்சத்தீவு மற்றும் இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடித் தொழில் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தி தமிழக மீனவா்களின் நீண்ட கால பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.