மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது: விவசாயிகள் கருத்து
மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிப்பதாக டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் தெரிவித்தனா்.


மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிப்பதாக டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் தெரிவித்தனா்.
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், நிகழாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இந்த நிதி நிலை அறிக்கைக்கு நாடு முழுவதும் பல்வேறு விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் எந்தவொரு அறிவிப்பும் இல்லை எனவும், பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து கடைமடை விவசாயிகள் சங்க நிா்வாகி தமிழ்ச்செல்வன் கூறியது:
மத்திய அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழக விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் எந்த விதத்திலும் பயனுமில்லை. தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் பிகாா் மாநிலத்திற்கு வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.14,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பேரிடா்களால் தொடா்ந்து விவசாயத்தில் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், பயிா்க் கடன்கள் தள்ளுபடியை எதிா்நோக்கினா். ஆனால், அது தொடா்பான அறிவிப்பும் இல்லை. சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...