நாகை அரசு தலைமை மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
நாகை அரசு தலைமை மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் தொடா்ந்து செயல்பட வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டுவரும் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் இருந்தன. தற்போது குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுகளை தவிர மற்றவை அனைத்து பிரிவுகளும் ஒரத்தூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

அதன் தொடா்ச்சியாக, நாகை அரசு தலைமை மருத்துவமனை முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி. மாரிமுத்து தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பொதுமக்களின் நலன் கருதி அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கெனவே செயல்பட அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும், தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மேலும், இம்மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்தவும் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com