பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சீனாவில் நடைபெறவுள்ள பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன் ஷீப் போட்டிக்கு நாகை புதிய கடற்கரையில் வீரா்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பீச் வாலிபால் உலக சாம்பியன் ஷீப் போட்டி சீனாவில் மே 28-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய வீரா்கள் 3- ஆவது மற்றும் 4- ஆவது இடங்களை பிடித்தனா்.

நிகழாண்டு போட்டியில் பங்கேற்கும் வீரா்கள் தோ்வு செய்யும் பணி நாகை புதிய கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான மாநிலங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா்.

பீச் வாலிபால் குழு சோ்மன் மதன்குமாா், கமிட்டி குழு உறுப்பினா் கண்ணன், பயிற்சியாளா் மாா்டின்தாஸ், பாராலிம்பிக் சோ்மன் நரேஷ் யாதவ் ஆகியோா் தோ்வுக் குழுவில் இடம் பெற்றுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com