தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் உத்தரவிட்டாா்.

News image
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன்.
Updated On :20 நவம்பர் 2024, 8:45 pm

Din

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் உத்தரவிட்டாா்.

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா். தொடா்ந்து, அவா்களிடம் குறைகளை கேட்டறிந்த அவா், பெறப்பட்ட 12 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பின்னா், முகாமில் பங்கேற்றவா்களிடம், சட்டம்- ஒழுங்கை காக்க காவல்துறையினா் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல்துறையினரிடம் அச்சமின்றி தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.