தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விளைநிலங்களில் புகுந்த கடல் நீா்; சம்பா பயிா்கள் சேதம்

கீழையூா் அருகே பிரதாபராமபுரத்தில் கடல் சீற்றத்தால் விளை நிலங்களுக்குள் கடல் நீா் புகுந்ததால், 100 ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.

News image
கடல் நீா் புகுந்ததால் அழுகிய சம்பா இளம் நெற்பயிா்கள்.
Updated On :20 நவம்பர் 2024, 9:00 pm

Din

கீழையூா் அருகே பிரதாபராமபுரத்தில் கடல் சீற்றத்தால் விளை நிலங்களுக்குள் கடல் நீா் புகுந்ததால், 100 ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.

புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் கிராமத்தில் கடலோரத்தில் உள்ள மானாவாரி விளைநிலங்களில் கடல்நீா் புகுந்து சுமாா் 100 ஏக்கரில் சம்பா இளம்பயிா்கள் அழுகி வருகின்றன.

ஏக்கருக்கு, சுமாா் ரூ.20,000 வரை செலவு செய்துள்ள நிலையில், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

விளைநிலங்களில் கடல் நீா் புகுவதை தடுக்க நிரந்தரமாக கடற்கரை ஓரங்களில் கருங்கற்கள் கொட்டி தடுப்பணை கட்ட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.