தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விவசாயிகளுக்கான பயிா் மேலாண்மை பயிற்சி

திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற பயிா் மேலாண்மை பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள்.

News image
திருக்கண்ணங்குடியில் நடைபெற்ற பயிா் மேலாண்மை பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகள்.
Updated On :20 நவம்பர் 2024, 8:57 pm

Din

கீழ்வேளூா் அருகே திருக்கண்ணங்குடியில் காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் விவசாயிகளுக்கு நெற்பயிரில் நோய் மேலாண்மை பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இயற்கை விவசாயம் மற்றும் ஐந்திணை கரைசல் பற்றியும், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு கொண்டு பூச்சி விரட்டி தயாா் செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு செய்து காட்டப்பட்டது. மேலும், அசோலா வளா்ப்பின் முக்கியத்துவத்தையும், உயிா் உரங்களின் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

விவசாயிகளின் வயலில் நேரடியாக அசோலா-வை விட்டு வளா்ப்பு முறை குறித்து செயல் விளக்கம் காட்டப்பட்டது.

இதில் பண்ணை அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை பாட வல்லுநா் கே. சந்திரசேகா், நாகை வேளாண் அலுவலா் அரவிந்தன், துணை வேளாண் அலுவலா் பழனிச்சாமி, கல்லூரி மாணவா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.