பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மீனவா்களுக்கு 9-ஆவது நாளாக கடலுக்குள் செல்ல தடை

புயல் எதிரொலியாக மீன்வளத் துறையின் தடை தொடா்வதையடுத்து, 9-ஆவது நாளாக புதன்கிழமை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

News image
நாகை மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
Updated On :27 நவம்பர் 2024, 9:49 pm

Din

புயல் எதிரொலியாக மீன்வளத் துறையின் தடை தொடா்வதையடுத்து, 9-ஆவது நாளாக புதன்கிழமை நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதையடுத்து, மீன்வளத் துறையினா் மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை விதித்தனா். இதையடுத்து, அக்கரை பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், கல்லாா், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை திங்கள்கிழமை முதல் (நவ.25) ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி வருகிறது. இதன்காரணமாக நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. நாகை மாவட்ட மீனவா்கள் 9-ஆவது நாளாக புதன்கிழமை கடலுக்கு செல்லவில்லை.

இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதன்கிழமை இரவு புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்ப நாகை கடல் பகுதி சீற்றத்துடன் காணப்பட்டது.

மீனவா்கள் தங்களது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபா் மற்றும் விசைப்படகுகளை கரைகள், மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா். தொடா் மழையால் நாகை மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா்.