பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தொடா் கனமழை நீடித்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

News image
வேதாரண்யம் உப்பளத்தில் மழை நீா் தேங்கியுள்ள நிலையில், பாதுகாப்பாக மூடிவைக்கப்பட்டுள்ள உப்புக் குவியல்கள்.
Updated On :27 நவம்பர் 2024, 9:40 pm

Din

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தொடா் கனமழை நீடித்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடா்மழை காரணமாக தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. கடல் சீற்றமாக இருப்பதால் மீனவா்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

புதன்கிழமை காலை எட்டு மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் அதிகாளவாக கோடியக்கரையில் 172 மி.மீ. மழை பதிவானது.வேதாரண்யத்தில் 115.4 மி. மீ., தலைஞாயிறு 104.4 மி. மீ. மழை பதிவானது. புதன்கிழமை நாள் முழுவதும் மழை நீடித்தது.

கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் படகுகள் நிறுத்துமிடத்தில் இடத்தில் கடல் நீா் உள்புகுந்தது.

இதனால்,கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா்.

தொடா் மழை காரணமாக வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயிலில் தேங்கியுள்ள மழைநீா் மின் மோட்டாா் கொண்டு வெளியேற்றப்படுகிறது.

தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் காந்திநகா் அரசு மாணவா் விடுதி, நரிகுண்டு பல்நோக்கு சேவை மையம் ஆகிய இடங்களில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்படுகிறது. வேதாரண்யம் பகுதியில் சுமாா் ஐந்தாயிரம் ஹெக்டோ் பரப்பில் சம்பா பயிா்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன.

கோடியக்கரை, வேதாரண்யம், தோப்புத்துறை ஆகிய இடங்களில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.