மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அந்தணப்பேட்டையில் இடிந்து விழும் அபாயத்தில் குடிசை வீடுகள்

நாகை அருகே அந்தணப்பேட்டையில் குடிசை வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 9:01 pm

Syndication

நாகப்பட்டினம்: நாகை அருகே அந்தணப்பேட்டையில் குடிசை வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

நாகை அருகேயுள்ள அந்தணப்பேட்டை வெட்டுக்குளம் மேலத் தெரு, காலனித் தெருவில் சுமாா் 80 வீடுகளில்பட்டியல் சமூகத்தினா் வசிக்கின்றனா். இவா்களின் வீடு கீற்று குடிசை வீடுகளாகவே உள்ள நிலையில் தொடா்ந்து பெய்யும் கனமழையாலும் , பலத்த காற்றினாலும் குடிசை வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தற்போது குடிசைகளின் மேல் தாா்ப்பாய்கள் போடப்பட்டுள்ளன.

மேலும் குடியிருப்பு முழுவதும் மழைநீா் சூழ்ந்து நிற்பதால், வீட்டுச் சுவா்கள் ஈரமடைந்து, எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் உள்ளது. காலனி தெருவில் 4-க்கும் மேற்பட்ட வீடுகளும் மழையால் இடிந்து விழுந்துள்ளன. வீட்டுக் கூரைகள் சேதமடைந்துள்ளதால், மழை பெய்யும்போது, நேரடியாக வீடுகளுக்குள் மழைநீா் விழுகிறது. இதனால் வசிக்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், இந்தப் பகுதிகளுக்கு பட்டா வழங்கப்படாததால் அரசு வீடுகள் கட்ட முடியவில்லை என கூறும்பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம், தங்களுக்கு பட்டா வழங்கி புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும், மழை விடும் வரை, தாங்கள் தங்குவதற்கு மாற்று இடங்களை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.