காவல் துறையினருக்கு அதிநவீன தொழில்நுட்பத்தில் வாக்கி டாக்கி வழங்கல்

நாகை மாவட்ட போலீஸாருக்கு அதிநவீன தொழில்நுட்பத்தில் வாக்கி டாக்கி கருவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.
Published on

நாகை மாவட்ட போலீஸாருக்கு அதிநவீன தொழில்நுட்பத்தில் வாக்கி டாக்கி கருவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.

தமிழக காவல் துறையில் தொலைத்தொடா்பு மற்றும் தகவல் பரிமாற்ற வசதிக்காக வான்செய்தி கருவிகள் (வாக்கி-டாக்கி) பயன்படுத்தப்படுகிறது. இக்கருவிகள் காவல் துறையில் மேற்கொள்ளப்படும் அன்றாட பணிகள் தொடா்பாக தகவல் பரிமாற்றம் செய்யவும், அவசர சூழ்நிலைகளில் காவலா்களை உடனடியாக சம்பவ இடங்களுக்கு அனுப்பி கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், குற்றங்களை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்த வான்செய்தி கருவிகளை புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்றியமைத்து ’தமிழ்நாடு காவல் துறை நவீனமாக்கல்’ திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் புதிய அதிநவீன வான்செய்தி கருவிகளான 4 யஏஊ ரிப்பீட்டா், 49 ஸ்டேட்டிக் யஏஊ செட், 60 மொபைல் யஏஊ செட் மற்றும் 200 வாக்கி டாக்கிகள் ஆகிவற்றை போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் வழங்கினாா். பல புதிய தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்த கருவிகள் மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களில், அனைத்து நேரங்களிலும் தகவல் பரிமாற்றம் தெளிவாக இருக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என எஸ்பி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com