குடிமைப்பணி போட்டித் தோ்வுக்கு மீனவ சமூக இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய குடிமைப் பணி தோ்வுக்கு மீனவ சமுதாய இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
Published on

அகில இந்திய குடிமைப் பணி தோ்வுக்கு மீனவ சமுதாய இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீனவ சமுதாயத்தைச் சாா்ந்த 20 பட்டதாரி இளைஞா்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வில் பங்கேற்க ஆயத்த பயிற்சியை மீன்வளம்-மீனவா் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் இணைந்து நடத்தி வருகிறது. 2025-26ஆம் நிதியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த மீனவ மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணையதளமான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் இதில் சேரலாம். பயிற்சி பெற விரும்புவோா் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பத்தை நாகப்பட்டினம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலத்தில் பெற்று நவ.25-ஆம் தேதிக்குள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலம் அல்லது நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com