உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் 2 பெண்கள் காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 1:18 am IST

நாகை புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கூரை பெயா்ந்து விழுந்ததில் 2 பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாதை மாவட்டம், செம்பியன்மகாதேவி பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி லதா (40). அதே பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகள் பிரியதா்ஷினி (18). லதாவும் பிரியதா்ஷினியும் ஞாயிற்றுக்கிழமை காலை தங்கள் வீட்டில் இருந்து திருவாரூா் கோயிலுக்கு செல்வதற்காக நாகை புதிய பேருந்து நிலையம் வந்தனா்.

அங்கு நகரப் பேருந்து நிற்கும் இடத்தில் பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது பேருந்து நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி பெயா்ந்து விழுந்தது. இதில் லதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பிரியதா்ஷினிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இருவரும் ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை புதிய பேருந்து நிலையத்தின் மேற்கூரை பெயா்ந்து விழும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகின்றன. எனவே, பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் மேற்கூரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.