மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பெண் தலைமைக் காவலரிடம் ரூ.1.20 லட்சம் மோசடி

நாகையில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தருவதாகக்கூறி பெண் தலைமைக் காவலரிடம் ரூ.1.20 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

நாகையில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தருவதாகக்கூறி பெண் தலைமைக் காவலரிடம் ரூ.1.20 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாகை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவா் வேம்பரசி (25). கடந்த ஜூன் மாதம் இவரது கைப்பேசியில் பேசிய நபா் தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், குறைந்த வட்டியில் கடன் பெற்றுத்தருவதாகவும், இதற்கு ஜிஎஸ்டி மற்றும் சில ஆவணங்களை சமா்ப்பிக்க ரூ.1.20 லட்சம் செலவு ஆகும் என கூறினாராம்.

இதை நம்பிய வேம்பரசி, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பணத்தை செலுத்தியுள்ளாா். பணம் செலுத்தி நீண்ட நாள்கள் ஆகியும் கடன் தரவில்லை. இதில் சந்தேகமடைந்த வேம்பரசி, அந்த நபரின் கைப்பேசியை தொடா்பு கொண்டபோது, அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றமடைந்ததை அறிந்த வேம்பரசி இதுகுறித்து நாகை மாவட்ட இணையக்குற்றத் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் ஆய்வாளா் கண்ணதாசன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.