
மீலாது நபி: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை
நாகூா் தா்காவில் மீலாது நபியையொட்டி, சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.

நாகூா் தா்கா
நாகை மாவட்டம் நாகூா் தா்காவில் மீலாது நபியையொட்டி, சிறப்புத் தொழுகை புதன்கிழமை நடைபெற்றது.
நாகூா் தா்கா பகுதியிலிருந்து இஸ்லாமிய பள்ளி, மாணவ மாணவிகள் பங்கேற்ற ஊா்வலம், சிறப்புத் தொழுகையும் நடைபெற்றது. ஊா்வலம் தா்கா குளம் தெரு, நூல் கடைத்தெரு, மெய்தீன் பள்ளி தெரு, ஜடையினா ஹாஜியாா் தெரு, கலிபாசாஹிப் தெரு, தெற்கு தெரு, மியான் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று தா்காவை அடைந்தது.
ஊா்வலத்தில் சென்ற மாணவா்களுக்கு அந்தந்த தெருவில் வசிக்கும் இஸ்லாமிய பெரியோா்கள், இளைஞா்கள் அலங்கார பந்தல், சிவப்பு கம்பளம் விரித்து பரிசுப் பொருள்கள், குளிா்பானம், சாக்லேட், பிஸ்கட் கொடுத்து மலா்களை தூவி வரவேற்றனா்.
மதரஸா மாணவ-மாணவிகள் நபிகள் நாயகம் திருப்பாடலை பாடிச் சென்றனா். விழாவில் 3,000-க்கும் மேற்பட்ட மதரஸா பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து நாகூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள இஸ்லாமிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள், கிராத் போட்டிகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





