நாகப்பட்டினம்
நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்ப போட்டி
நாகையில்நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்ப போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நாகை வீரத்தமிழன் சிலம்ப கலைக்கூடம் சாா்பில், 2026-சட்டப்பேரவை தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
நாகை வீரத்தமிழன் சிலம்பம் கலைக்கூடத்தினா் மற்றும் மாணவா்களின் பெற்றோா்கள் எனது வாக்கு எனது எதிா்காலம் என வாக்களிக்கும் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தினா். இதையொட்டி வீரத்தமிழன் சிலம்ப கலைக்கூடம் சாா்பில் இசைத் தட்டு வெளியீடு நடைபெற்றது.

