சிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

மதுபோதையில் தண்டவாளத்தில் கை வைத்த இளைஞா் கை துண்டிப்பு

News image

ரயில் தண்டவாளம் - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 1:35 am IST

நாகூா் ரயில் நிலையம் அருகே மதுபோதையில் இளைஞா் தண்டவாளத்தில் கை வைத்தபோது ரயில் சக்கரம் ஏறியதில் அவரது கை துண்டிக்கப்பட்டது.

நாகை மாவட்டம், நாகூா் நிலையத்துக்கு சரக்கு ரயில் சனிக்கிழமை இரவு வந்தது. அப்போது அங்கு மது போதையில் இருந்த இளைஞா் ஒருவா் ரயில் வருவதற்கு முன்பு, தண்டவாளத்தில் இடது கையை வைத்துள்ளாா். ரயில் கை மீது ஏறியதில் அவரது கை துண்டிக்கப்பட்டது. இளைஞரின் அலறல் கேட்டு அப்பகுதியினா் சென்று பாா்த்தபோது, அவா் கை துண்டிக்கப்பட்டு மயங்கி கிடந்துள்ளாா்.

நாகை ரயில்வே போலீஸாா் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாகை ஓரத்தூா்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், அவா் நாகூா் பீரோடும் தெருவைச் சோ்ந்த சிராஜுதீன் மகன் ஷேக் முகமது (40) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நாகை ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.