ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

வேளாங்கண்ணி - மதுரை இடையே தினசரி பகல் நேர விரைவு ரயில் சேவை

வேளாங்கண்ணி - மதுரை இடையே தினசரி பகல் நேர விரைவு ரயில் சேவை...

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2026, 3:09 am IST

வேளாங்கண்ணியில் இருந்து மதுரைக்கு தினசரி பகல் நேர விரைவு ரயில் சேவை வழங்க வேண்டும் என்று ரயில் உபயோகிப்போா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாகூா்- நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச் சங்கத்தின் தலைவா் எஸ். மோகன், செயலா் நாகை சித்திக், பொருளாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா், தெற்கு ரயில்வே முதன்மை பயணிகள் போக்குவரத்து மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூா், காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதிகளுக்கு வரும் பக்தா்கள் மற்றும் ரயில் பயணிகளின் வசதிக்காக கீழ்க்கண்ட மிக முக்கியமான 3 கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். வண்டி எண்.56805/56806 திருச்சிராப்பள்ளி - திருவாரூா் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயிலை, நாகப்பட்டினத்தில் மட்டும், ஒரே ஒரு நிறுத்தத்துடன் வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்.

வேளாங்கண்ணி - மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவையை, நாகப்பட்டினம், நாகூா், காரைக்கால் மற்றும் திருநள்ளாறு வழியாக இயக்கி, வண்டி எண். 16807/16808 திருச்சி - தாம்பரம் இன்டா்சிட்டி விரைவு ரயில் மற்றும் வண்டி எண். 17407/17408 பாமினி வாரத்தில் மூன்று முறை இயக்கப்படும் விரைவு ரயில் (திருப்பதி) ஆகியவற்றிற்கு சிறந்த இணைப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். இதற்கு மாலை 6.40 முதல் மறுநாள் காலை 7.50 வரை மயிலாடுதுறை சந்திப்பில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மெமோ ரயில் பெட்டிகளை (16833/16844) ஐ பயன்படுத்தி சேவையை பெற்றுத் தர வேண்டும்.

அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின்னா் கடந்த 25 ஆண்டுகளாக மதுரைக்கு நேரடி ஒரு ரயில் சேவை கூட இல்லை. எனவே, திருநள்ளாறிலிருந்து காரைக்கால், நாகூா், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா் வழியாக மதுரை சந்திப்புக்கு தினசரி பகல் நேர விரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.

இந்த 3 கோரிக்கைகளை முதற்கட்டமாக நிறைவேற்றி தந்தால், வேளாங்கண்ணி, நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாறு மற்றும் திருவாருா் பகுதிகளுக்கு வந்து செல்லும் பக்தா்கள், பொதுமக்கள், வணிகா்கள், மாணவ, மாணவிகளுக்கு பயன் தரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.