நாகை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களில் பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை நாகை மண்டல இணை ஆணையா் குமரேசன் உத்தரவின் பேரில், நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் நீா் மோா் வழங்கப்பட்டது.
நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில், சிக்கல் சிங்கார வேலவா் கோயில்களில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டது. கோயில் செயல் அலுவலா் வீர விநாயக ஜெயந்த், மணிகண்டன் மற்றும் கோவில் குருக்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









