தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

கீழையூா் அருகே ரூ.97 ஆயிரம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 6:54 pm

கீழையூா் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 97 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படை குழுவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கீழையூா் அருகே மேலப்பிடாகை கடைத் தெருவில் பறக்கும்படை அதிகாரி மாரிராஜ் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது, தலைஞாயிறு மூன்றாம் சேத்தி, பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த முகம்மது ஹாலிது என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டு பணம் (இந்திய மதிப்பு) ரூ.97 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது.

ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைத்தனா்.