திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, செவிலியா் பயிற்சி கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 மார்ச் 2026, 9:08 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, செவிலியா் பயிற்சி கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ- மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பேருந்து நிலையங்கள், பொது இடங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், நாகை அரசு செவிலியா் பயிற்சிக் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைத் தோ்தலின் முக்கியத்துவம், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தொடா்ந்து மாணவ- மாணவியா் ‘எனது வாக்கு எனது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கல்ல, நான் முதல் முறை வாக்காளா்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி தோ்தல் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.