தமிழக நீா்த் தேக்கங்களில் நீா் இருப்பு குறைவால் தட்டுப்பாடு அபாயம்! போா்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

வைகை அணையின் நீா்த் தேக்கப் பகுதி. - கோப்புப் படம்
தமிழகத்தில் உள்ள முக்கிய நீா்த் தேக்கங்களில் நீா் இருப்பு, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாக உள்ளதால், குடிநீா் மற்றும் விவசாயப் பாதுகாப்புக்கு, அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 90 முக்கிய நீா்த் தேக்கங்களின் மொத்த நீா் இருப்பு நவம்பா் 22-ஆம் தேதி நிலவரப்படி, அவற்றின் முழுக் கொள்ளளவில் 36.28 சதவீதமாக மட்டுமே இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த கவலையளிக்கிறது.
மேலும், 39 நீா்த் தேக்கங்களில் அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே நீா் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மேட்டூா் அணையில் கடந்த ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி 82,876 மில்லியன் கனஅடி நீா் இருந்த நிலையில், தற்போது 25,811 மில்லியன் கனஅடி மட்டுமே உள்ளது.
இத்தகைய நிலை, குடிநீா் விநியோகம், விவசாயப் பாசனம், கால்நடை வளா்ப்பு மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள போதிலும், மழை பெய்வது மட்டுமே நீா் நெருக்கடிக்குத் தீா்வாகிவிடாது. பெய்யும் மழைநீரை முறையாகச் சேமித்து, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தி, நீா்நிலைகளைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகும்.
எனவே, அனைத்து முக்கிய நீா்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களின் தற்போதைய நீா் இருப்பு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
மழைநீா் சேகரிப்பு, ஏரிகள் மற்றும் குளங்களைத் தூா்வாருதல், நீா்வரத்துக் கால்வாய்களைச் சீரமைத்தல் ஆகிய பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட நகா்ப் புறங்களில் குடிநீா் விநியோகத்திற்கான மாற்றுத் திட்டங்களை முன்கூட்டியே தயாரிக்க வேண்டும்.
விவசாயப் பாசனத்திற்கான நீா் மேலாண்மையை விவசாயிகள் சங்கங்களுடன் கலந்தாலோசித்து வகுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து விவசாயிகளுக்கும், கால்நடை வளா்ப்போருக்கும் தேவையான நிவாரண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
கா்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். வரவிருக்கும் மாதங்களில் குடிநீா் மற்றும் விவசாயத் தேவைகளில் நெருக்கடி ஏற்படாமல் இருக்கத் தமிழக அரசு இப்போதே திட்டமிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

