நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு: 3 பெண்கள் கைது

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

குன்னலூர் மேச்சேத்தியைச் சேர்ந்த சண்முகம் மனைவி மலர்க்கொடி. இவர் திங்கள்கிழமை திருத்துறைப்பூண்டி வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு தனியார் பேருந்தில் சென்றார். அப்போது, அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மலர்க்கொடி அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 3 பெண்களை பிடித்து போலீஸார் விசாரித்ததில், அவர்கள் மூவரும் சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த முருகன் மனைவி தேவி (32), விக்னேஷ் மனைவி சாதனா (23) மற்றும் பழனியம்மாள் (37) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மூவரும் பேருந்தில் மலர்க்கொடியிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.