அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கூத்தாநல்லூர் ஆற்றோரத்தின் சுகாதாரக்கேட்டை ஆணையரிடம் காண்பித்த அ.தி.மு.க. பிரமுகர்கள்

கூத்தாநல்லூர் ஆற்றோரத்தின் சுகாதாரக்கேட்டை ஆணையரிடம் அதிமுக பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 9:03 pm

DIN

கூத்தாநல்லூர் ஆற்றோரத்தின் சுகாதாரக்கேட்டை ஆணையரிடம் அதிமுக பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர்.
கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு எதிரேயுள்ள,  வெண்ணாற்றின் கரையோரத்தில், கீற்றுக் கொட்டகையில் கூத்தாநல்லூர்  நகர அ.தி.மு.க. அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  இந்த அலுவலகத்தின் பின்புறத்திலும்,  ஓரத்திலும்   சுகாதாரக் கேடாக இருக்கிறது. அந்த   இடத்தை  நகரச் செயலாளர்  டி.எம்.பஷீர்  அகமது தலைமையில்,  நகர துணைச் செயலாளர் எம்.உதயகுமார்,  மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்  எல்.எம்.முகமது  அஷ்ரப்,  நகர  எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஆர்.ராஜசேகரன் உள்ளிட்டோர்,  நகராட்சி  ஆணையர் புவனேஸ்வரனை அழைத்து வந்து,  சுகாதாரக் கேடான  இடத்தை காண்பித்தனர். இடத்தைப் பார்த்து விட்டு,  உடனே சுத்தம் செய்து தருவதாகக்  கூறினார்  ஆணையர் புவனேஸ்வரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.