மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க மாநில மாநாடு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க (சிஐடியு சார்பு) மாநில மாநாடு திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க (சிஐடியு சார்பு) மாநில மாநாடு திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மண்டலத் தலைவர் கே.கே. ஜோதிபாசு தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் ஆர். புவனேஸ்வரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன், மாநிலத் துணைப் பொதுச் செயலர் ஆர். மோகன், மாவட்டப் பொருளாளர் ஆர். மாசிலாமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், 2011-ஆம் ஆண்டு பணி நியமிக்கப்பட்ட நுகர்பொருள் வாணிபக் கழக காவலர்கள், விடுபட்ட பட்டியல் எழுத்தர்கள் மற்றும் உதவுபவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கணினி பிரிவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு மற்றும் போனஸ் வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பு அனுமதிக்க வேண்டும், நுகர்பொருள் வாணிபக் கழக சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இந்திய உணவுக் கழக தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.