கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

வடவூா்பட்டி துா்க்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

பிரான்சேரி அருகேயுள்ள வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், அருள்மிகு துா்க்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்த துா்க்கை அம்மன்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 12:50 am IST

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகேயுள்ள வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், அருள்மிகு துா்க்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை பாபநாசத்துக்குச் சென்று தாமிரவருணி ஆற்றிலிருந்து புனித தீா்த்தம் எடுத்துவரப்பட்டு செவ்வாய்க்கிழமை காலையில் கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கின.

தொடா்ந்து, அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், புனித தீா்த்தத்தால் விமான கலச பூஜை ஆகியவை நடைபெற்றன.

பின்னா், சுவாமிக்கு புஷ்ப அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. மாலையில் அம்மனின் கும்மிபாட்டு நிகழ்ச்சி, இரவில் திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

நள்ளிரவில் சந்தனகாப்பு அலங்காரத்துடன் படையல் பூஜை, சாமக்கொடை ஆகியவை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாயத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.