கேரள வெள்ளத்தில் இழந்த பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க வேண்டும்: நெல். ஜெயராமன்

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டுமென நமது நெல்லைக் காப்போம்

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டுமென நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியது:
இந்தியாவிலேயே இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதிலும், மறுஉற்பத்தி செய்வதிலும் தேசிய அளவில் கேரளத்துக்குப் பெரும் பங்கு உள்ளது. கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் கெளடியாரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தணல் என்ற அமைப்பு பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதிலும், பரவலாக்குவதிலும், மறுஉற்பத்தி செய்வதிலும் பெரும் முயற்சி எடுத்து, கடந்த 2004-ஆம் ஆண்டு கொச்சி அருகே கும்பளங்கி என்ற பகுதியில், தேசிய அளவில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கத்தை நடத்தியது. இவ்விழாவை தலைமையேற்று நடத்திய வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார், இயற்கை வேளாண்மையையும், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதுமே தேசிய அளவில் வேளாண்மையில் பெரும் மாற்றத்தைத் தரும் என்றார். கேரளத்தில் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை மீட்டெடுக்க வேண்டும்.
கேரள வெள்ள நிவாரண நிதியாக கடந்த ஜூலை மாதம் தனக்கு  கிடைக்கப்பெற்ற மதிப்பூதியமான ரூ.17000-ஐ முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளதாக நெல். ஜெயராமன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.