
மன்னார்குடியில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து பரிந்துரைகளையும் முன் தேதியிட்டு 1.1.2016 முதல் அமல்படுத்த வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; ஓய்வூதியம் வழங்க வேண்டும்; சம்பளக் குறைப்பு செய்யக் கூடாது; அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலராஜ வீதியில் உள்ள தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கிளைத் தலைவர் ஆர். தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.சங்க செயலர் எம். உதயகுமார், பொருளாளர் ஏ.பண்டரிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், மன்னார்குடி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட கிராம அஞ்சல் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பு செய்து, கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





