ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் மீட்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர தமிழக முதல்வரின் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்டத்தில் பணிகளை மேற்பார்வையிட கூட்டுறவுத்துறை அமைச்சர், பால்வளத்துறை அமைச்சர், 3 இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4,966 பணியாளர்கள், பிற மாவட்டத்தைச் சேர்ந்த 1,410 பணியாளர்கள், 50 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்பட 6,426 பணியாளர்கள் மீட்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 205 நிவாரண மையங்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 251 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு,  குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களில் மருத்துவக் குழுக்கள் மூலம் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அரசின் மீட்புப் பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.