தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

முத்துப்பேட்டை ரயில் நிலைய தகுதிக்குறைப்பு விவகாரம்:திருச்சி சிவா எம்பியிடம் கோரிக்கை மனு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில் நிலைய தரக்குறைப்பு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ரயில்வே

Published On :

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில் நிலைய தரக்குறைப்பு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ரயில்வே அமைச்சரிடம் முறையிடக் கோரி, ஜாம்பவானோடை தர்கா நிர்வாக அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர் அலிசாகிப் அலி தலைமையிலான குழுவினர், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பது:
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட முத்துப்பேட்டை ரயில் நிலையம், உலகப் புகழ்பெற்ற தர்கா மற்றும் பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்பட பல்வேறு வழிப்பாட்டு தலங்கள், லகூன் மற்றும் அலையாத்திக் காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களால் ரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்தது. 
இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், 'பி' கிரேடாக இருந்த முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை தரம் குறைத்து, 'டி' கிரேடாக மாற்ற தென்னக ரயில்வே முயற்சித்து வருகிறது. இதன்மூலம் இப்பகுதிக்கு வரும் ரயில்கள் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும், நிலைய மேலாளர் இல்லாத ரயில் நிலையமாகவும் முத்துப்பேட்டை உருவாகும்.
இதனால், இப்பகுதி மக்களுக்கும், வியாபாரிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு இடர்கள் ஏற்படும். எனவே, முத்துப்பேட்டை ரயில் நிலைய தகுதி குறைப்பு விவகாரத்தை சம்பந்தப்பட்ட ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக்கொண்ட திருச்சி சிவா எம்பி, இந்த கோரிக்கைகளை ரயில்வே அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, நிறைவேற்ற முயற்சிப்பதாக  உறுதி அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.