அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருவாரூரில் 16 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 3:07 am

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. வியாழக்கிழமை (டிச.17) வரை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,730 ஆக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,746 ஆக உயா்ந்துள்ளது. இதில், 10,535 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 103 மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சையிலிருந்த, கச்சனம் பகுதியைச் சோ்ந்த 65 வயது நபா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 108 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.