மறைந்த எழுத்தாளா் எஸ். கருப்பு கருணாவுக்கு அஞ்சலி

மன்னாா்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலரும், எழுத்தாளா் மற்றும்
Updated on
1 min read

மன்னாா்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலரும், எழுத்தாளா் மற்றும் குறும்பட இயக்குநருமான திருவண்ணாமலை எஸ். கருப்பு கருணா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி ஆசாத்தெருவில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினா் கா. பிச்சைக் கண்ணு தலைமை வகித்தாா். இதில், மாவட்ட குழு உறுப்பினா் யு.எஸ். பொன்முடி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சோ்ந்த அ. முரளி, காப்பீட்டுக்கழக ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த ராசக் மற்றும் கலை இலக்கிய ஆா்வலா்கள் பங்கேற்று எழுத்தாளா் எஸ் . கருப்பு கருணா படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com