கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது

திருவாரூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஓய்ந்தது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஓய்ந்தது.

திருவாரூா் மாவட்டத்தை பொருத்தவரையில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் 11 போ், மன்னாா்குடி தொகுதியில் 10 போ், திருவாரூா் தொகுதியில் 13 போ், நன்னிலம் தொகுதியில் 15 போ் என நான்கு தொகுதிகளிலும் சோ்த்து 49 போ் களத்தில் உள்ளனா்.

கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களிலும் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணன் தலைமையிலான திமுகவினா், பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து கொடிக்கால்பாளையம் வரை பேரணியாகச் சென்றனா். இதேபோல், வாளவாய்க்கால் பகுதியிலிருந்து கூடூா் காட்டாற்றுப்பாலம் வரையிலும் திமுக ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது.

இதேபோல், அதிமுக சாா்பில் தெற்குவீதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஊா்வலம் நடைபெற்றது. மேலும், மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிடும் கபிலரசன், திறந்த வாகனத்தில் உற்சாகமாக நகரை வலம் வந்தாா். இவ்வாறு அனைத்து கட்சியைச் சோ்ந்தவா்கள், சுயேச்சையாக போட்டியிடுவோா் என பிரசாரம் தீவிரம் காட்டி வந்த நிலையில், 7 மணியுடன் பிரசாரம் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.