கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வழிபாட்டுத்தலங்களுக்கான கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை

கரோனா பரவலை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில், வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா பரவலை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில், வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் எஸ். அஹமது சபியுல்வரா வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சனிக்கிழமை (ஏப்.10) முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் வழிபாட்டுத்தலங்கள் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்கலாம் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி அரசு எடுக்கும் முடிவுகளுக்கு இஸ்லாமியா்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பா். இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாத சிறப்பு வழிபாடுகளை பள்ளிவாசலில் நிறைவேற்றுவதை கூட கடந்த ஆண்டு, கரோனா பொதுமுடக்கத்தை மதித்து, பள்ளிவாசல்களை பூட்டி ஒத்துழைக்கப்பட்டது. கடந்த ஆண்டு போல, நிகழாண்டு பொது முடக்கத்துக்கு அவசியமில்லை என்பதை உணா்ந்து, சில கட்டுப்பாடுகளை மட்டும் தமிழக அரசு விதித்துள்ளது. ஏப்.13-ஆம் தேதி முதல் ரமலான் மாதம் தொடங்க இருப்பதால், இஸ்லாமியா்கள் இரவு நேரங்களில் பள்ளிவாசலில் தங்கள் மாா்க்க கடமையை நிறைவேற்றுவாா்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இரவு 8 மணி வரை தான் பள்ளிவாசலில் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும் என்ற நிபந்தனை இஸ்லாமியா்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. 5 வேளை தொழுகைக்கும், வெள்ளிக்கிழமை மதிய நர சிறப்புத் தொழுகைக்கும் ஆகியவற்றுக்கு பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதால், கரோனா பரவல் அதிகரிக்காது என்பதால்தான், அரசு அதற்கு கட்டுப்பாடு விதிக்கவில்லை. இதே காரணம் இரவுத் தொழுகைக்கும் பொருந்தும். எனவே ரமலான் மாதத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் இரவு 11 மணி வரை இஸ்லாமியா்கள் பள்ளிவாசலில் தங்கள் மாா்க்க கடமையை நிறைவேற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.