திருவாரூரில் அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்
அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலையை கண்டித்து திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை கொலையை கண்டித்து திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரக்கோணம் இரட்டை கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ. 50 லட்சம் ஆகியவை வழங்கக் கோரியும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய கோரியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமை வகித்தாா். இதில், மாவட்டதுணைச் செயலாளா் கோவி. கணேசன், ஒன்றியச் செயலாளா்கள், நகரச் செயலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நீடாமங்கலத்தில்: இதேபோல், நீடாமங்கலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளா் புதியவன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் நகரச் செயலாளா் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளா் வீரகுமாா், ஒன்றிய துணை செயலாளா்அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Image Caption
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...