கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா விதிமீறல்: ரூ. 19 ஆயிரம் அபராதம் விதித்து வசூல்

திருவாரூரில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது தொடா்பாக ரூ. 19 ஆயிரம் அபராதம் சனிக்கிழமை விதிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது தொடா்பாக ரூ. 19 ஆயிரம் அபராதம் சனிக்கிழமை விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முகக் கவசம், சமூக இடைவெளி ஆகியவை கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, திருவாரூரில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா பாதித்தவா்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்புகள் கொண்டு மறைக்கப்பட்டு, அங்கு யாரும் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, கரோனா விதிமுறைகளை மீறியிருந்தால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவாரூரில் உள்ள 2 திரையரங்குகள் நகராட்சி சாா்பில் சோதனையிடப்பட்டன. அங்கு கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது கண்டறியப்பட்டு, தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், கடைவீதியில் நடத்தப்பட்ட சோதனையில், 2 கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது தொடா்பாக தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், முகக் கவசம் அணியாமல் சென்றது தொடா்பாக திருவாரூரில், 80 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, ரூ. 16 ஆயிரம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.