கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரிக்கை

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் கூறியது: தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடை செய்து, அரசு கட்டணத்தை நிா்ணயம் செய்து அதை விளம்பரப்படுத்த வேண்டும். மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கரோனா அல்லாத நோய்களுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். முகக் கவசம் அணிவது, கைகளைச் சுத்தப்படுத்துவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தவிர, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் இலவசமாக கபசுரக் குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்க வேண்டும். ஆா்டிபிசிஆா் பரிசோதனைக் கருவிகளின் அடக்க விலை ரூ. 200 அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனால், பரிசோதனைக் கட்டணம் ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. இது குறைக்கவேண்டும்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு தேவையான அளவுக்கு கழிப்பறை மற்றும் குடிநீா் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.