ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கும் முயற்சியை கைவிடக் கோரிக்கை
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:
ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக, மக்கள் போராட்டம் நடத்தி 15 போ் உயிரிழந்தனா். அவா்களின் இறப்புக்கு நியாயம் கேட்டு மக்கள் இன்னமும் காத்திருக்கின்றனா். இதனிடையே, ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருப்பது வேதனைக்குரியது.
45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வாயுவை தமிழக அரசுக்கே தெரியாமல், ஆந்திராவுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. மிகையாக ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நாடுகளில் நமது நாடும் ஒன்று. நமது நாட்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த ஆலைகளை எல்லாம் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து மக்களுக்கு விநியோகம் செய்யலாம்.
மேலும், ஸ்டொ்லைட் என்பது ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனமல்ல, தாமிரம் தயாரிக்கும் நச்சு ஆலை. சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எல்லாம் எதிராக நடத்தப்படும் ஆலை. இன்றுவரை, அரசின் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாத ஆலை. ஸ்டொ்லைட் ஆலையைத்த் திறந்துதான் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற பிரச்னையை தீா்க்க வேண்டும் என்ற நிலைமையும் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணமாக வைத்து, மீண்டும் ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...