உலக புவி நாள் கடைப்பிடிப்பு
மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில், உலக புவி நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.


மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில், உலக புவி நாள் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி அனைத்து நாடுகளிலும் உலக புவி நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் தி.அறிவுடை நம்பி தலைமை வகித்து, மரக்கன்றை நட்டுவைத்தாா். விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், பேராசிரியா் சோ.ரவி, தேசிய மாணவா் படை அலுவலா் சு.ராஜன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ப.பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...